பள்ளி வேன் மீது மோதிய ரயில். பெரும் துயரத்தை ஏற்படுத்திய கடலூர் விபத்து.
1) கேட் கீப்பரின் அலட்சியமா?
2) வேன் டிரைவரின் அவசரமா?
3) அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையா? முக்கியமாக தொழில்நுட்ப காரணங்களா?
எதனால் நடந்தது இந்த விபத்து?
இன்னொரு பக்கம், மதுரையில் 5 மண்டல குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பின்னணியில் ரூ 200 கோடி முறைகேடு புகார்.
இதையொட்டி கே.என் நேரு விசாரணையில் இறங்கினார். அவர் கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் ஆக்ஷனில் இறங்கிய மு.க ஸ்டாலின். ஆனாலும் இதை கையில் எடுத்து களமாட துடிக்கும் அதிமுக.
முக்கியமாக, 'ஆட்சிக்கு பெரிய வரவேற்பு இல்லை' என உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட். எனவே இப்படியான ஆக்ஷன் காட்சிகள் அதிகரிக்கலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
இதன் தொடர்ச்சியாகவே, ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டம். போட்டியாக நடத்திய அன்புமணியின் கூட்டம். யார் யாருக்கு கட்டம் கட்டப் போகிறார்கள்?
பாமக-வின் நீண்ட கிளைமாக்ஸ்!