'பிஜேபியாகவே மாறிவிட்டார் எடப்பாடி' என ஸ்டாலின் விமர்சனம் . 'இந்த கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு பயம்' என எடப்பாடி விமர்சனம். இதற்கிடையே திருமாவும், எடப்பாடியும் மாறி மாறி அட்டாக் செய்து கொள்கின்றனர். இதை வைத்து ஸ்டாலின் சாதக கணக்கு போடுகிறார். முன்பு கூட்டணி மாறுவதற்கான வாய்ப்பு இருந்தது ஆனால் இந்த பிரச்சனைக்கு பிறகு அந்த வாய்ப்பு குறைவு. மேலும் அதிமுகவை காரணம் காட்டி அதிக தொகுதிகளை திமுக கூட்டணி கட்சிகளாலும் டிமாண்ட் செய்ய இயலாது இதனாலேயே தன்னுடைய டாஸ்க் நிறைவேறியதாக ஸ்டாலின் கணக்கு.