தவெக-வின் செயற்குழுக் கூட்டம் பனையூரில் நடந்தது. விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர், பாஜக, அதிமுக கூட்டணி நிராகரிப்பு, ஆகஸ்டில் மாநாடு, செப்டம்பரில் சுற்றுப்பயணம் என ஸ்கெட்ச் போட்டுள்ளனர். இதில் சேலம் உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இன்னொரு பக்கம் கன்னியாகுமரியிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கலாமா என்று ஆலோசனைகள் ஓடுகிறது. இந்த முறை பாஜக-வை ஓபனாக, கடுமையாக அட்டாக் செய்துள்ளார் விஜய்.
இதற்கு பின்னணியில், விஜய் சந்தித்த சில நெருக்கடிகளும் காரணம் என்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள்.
'விஜய் ரூட்' வொர்க் அவுட் ஆகுமா?
இன்னொரு பக்கம், 'ஜூலை 25' - லிருந்து அன்புமணி சுற்றுப்பயணம் செல்கிறார். தனியார் ஏஜென்சிஸ் அவருக்காக களத்தில் இறங்க, இது பல சம்பவங்களுக்கு வழிவகை செய்யும் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
'அருளை' வைத்து 'ராமதாஸ் Vs அன்புமணி'-க்கு இடையே நடக்கும் சமீபத்திய யுத்தத்தை ஒட்டி, பாமக-வை முழுமையாக கைப்பற்ற, இந்த பயணம் உதவும் என நம்புகிறார்கள் அன்புமணி ஆதரவாளர்கள்.
இதன் தொடர்ச்சியாக 'ஜூலை 7'- ஆம் தேதியிலிருந்து பயணத்தை தொடங்கும் எடப்பாடி. சில வியூகங்களை வகுத்துள்ளார். இந்த பயணம், ஸ்டாலினை டார்கெட் செய்து இருந்தாலும், உள்ளுக்குள் அமித் ஷா-வுக்கான பதிலடியும் உள்ளது என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.