திமுக-வில் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர். இது ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக மதிமுக,விசிக,கம்யூனிஸ்ட்-கள் என பலரும் தலா '12' தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், இதை சரிகட்ட 'ஓரணியில் தமிழ்நாடு' என்பதில் தீவிர கவனம் செலுத்துகிறார் மு.க ஸ்டாலின்.
இன்னொரு பக்கம் 'மோதிப்பார்க்கலாம் ' என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் அன்புமணியும். கட்சியில் தன் தலைமைத்துவத்தை காப்பாற்ற டெல்லி பயணம் என வேகம் காட்டுகிறார். பின்னணியில் பாஜக தரும் அழுத்தங்கள் இருக்கலாம் என தகவல்.
ராமதாஸும்,எம்.எல்.ஏ அருள் மூலமாக ஆடிப்பார்க்கலாம் என முடிவுக்கு வந்துவிட்டார். ஏறக்குறைய உடையும் நிலையில் பாமக.