ஒரு பக்கம் முருகன் மாநாட்டில் தீவிரமாக இருந்தாலும் தங்களுக்கு ஏதுவான தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர் பாஜகவினர். அந்த வகையில் 80 தொகுதிகளை கையில் எடுத்து, அதில் 50 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு வரை சென்று, பட்டியலை தயார் செய்துள்ளனர்.
இது தற்போது அமித் ஷா பார்வைக்கும் சென்றுள்ளது.
முருகன் மாநாட்டில் கிடைக்கும் வெற்றி, பாஜக மீது திரும்பும் பொதுமக்கள் பார்வை இவையெல்லாம் திமுகவுக்கு அச்சுறுத்தலையும், இன்னொரு பக்கம் எடப்பாடி-யிடம் அதிக தொகுதிகளையும் பெற்று தரும் என டெல்லி கணக்கிடுகிறது. அந்த வகையில் முருகன் மாநாட்டின் பிரமாண்டம், இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை கொடுக்கக்கூடிய நெருக்கடிக்கும் எடப்பாடியை தள்ளியுள்ளது. பாசிட்டிவ்-வில் ஒரு நெகட்டிவ். இன்னொரு பக்கம், 'பாஜகவை நம்பி ஏமாந்து விட்டோம்' என புலம்பும் பன்னீர் டீம். உள்ளனர் பன்னீர் அவர்கள் எழுப்பியுள்ள போர்க்கொடியால், ஜூலை முதல் வாரத்தில் முக்கிய முடிவெடுக்க மீட்டிங் அரேன்ஜ் செய்துள்ளார் ஓபிஎஸ்