மாஜி அமைச்சர்களின் Files-களை தூசு தட்டும் மு.க ஸ்டாலின்.
முதற்கட்டமாக எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.காமராஜ், எஸ்.பி வேலுமணி வழக்குகளை தூசுதட்டுகின்றனர். அதில் முதல் ஹிட்லிஸ்டில் எஸ்.பி வேலுமணி உள்ளார். அவரை எதிர்த்து புதிய ஒரு ஆட்டத்தையும் ஆடத் தொடங்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி. ஏனெனில் எஸ்.பி வேலுமணி, அண்ணாமலை, விஜய் என கோவை களம் டஃப்பாக உள்ளது.
இதை முறியடித்து வெற்றி பெற புதிய வியூகங்கள் வகுத்துள்ளார் பாலாஜி. இன்னொரு பக்கம், ராமதாஸ் Vs அன்புமணி வார். இதில் அன்புமணியின் கூட்டுப் பிரார்த்தனை-யொட்டி, சேலம் மேற்கு பா.ம.க எம்.எல்.ஏ அருள் வீசிய அரசியல் வெடி. இதற்கிடையில் திருமாவிடம் கூடுதல் பாசத்தை வெளிப்படுத்தும் ராமதாஸ். இதன் மூலமாக மீண்டும் 'ராமதாஸ் - திருமாவளவன்' கூட்டணி உருவாகிறது என பாஜக அதிர்ச்சி.