தொகுதி வாரியாக 'ஒன் & ஒன்' மீட்டிங் நடத்தி வருகிறார் மு.க ஸ்டாலின். ஒவ்வொரு ஒ.செ-வுக்கும் கிட்டத்தட்ட ஆறு நிமிடம் வரை நேரம் கொடுக்கிறார். அதில் மாவட்ட செயலாளர், மந்திரிகள் குறித்தும் கட்சி செயல்பாடுகள் குறித்தும் கேட்கிறார். இதில் விழுப்புரம், சிதம்பரம், உசிலம்பட்டி டேட்டாக்கள் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதையொட்டி அங்கே இருக்கும் கோஷ்டி பூசல்கள் முக்கியமாக பொன்முடி வ்ச் லட்சுமணன் பிரச்சனை. இதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்கிறார். அடுத்து வீக் தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது, இதில் உதயநிதி ஸ்டாலினின் ரோல் என்ன? என பல ஆலோசனைகள் கொடுத்துள்ளார். சில தொகுதிகளில் ஒ.செ-க்கள், மந்திரிகளை போட்டுக் கொடுத்துள்ளனர். குறிப்பெடுத்துக் கொண்ட ஸ்டாலின், மந்திரிகள் ரிப்போர்ட்டில் இது எல்லாம் மைனஸ் மார்க்காக பதிவு செய்கிறார். இதனால் கலக்கத்தில் உள்ளனர் மந்திரிகள். குறிப்பாக 'மதுரை' சம்பவம்.
இதையே தான் கையில் எடுத்து களமாட தொடங்குகிறது பாஜக. முருகன் மாநாட்டை வைத்து ஸ்டாலினுக்கு நெருக்கடி இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை பெறுவது என இரட்டை அஜெண்டா. இதனால் ஒரு வகையில் தர்ம சங்கடத்தில் எடப்பாடி. இன்னொரு முக்கியமான காரணம், அமித்ஷா கையில் எடுத்திருக்கும் ஊழல் பட்டியல்.
அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து அண்ணாமலை கொடுக்கும் குடைச்சல்கள். செம்மலை மூலமாக இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி.
இதற்கிடையே அப்பா - மகன் யுத்தத்தில் Thug life கொடுத்துள்ளார் ராமதாஸ். சேலம் சென்றும் கோபம் குறையாமல் அன்புமணி.