இன்று ஜூன் 12ஆம் தேதி வியாழக்கிழமை பிரஸ்மீட்டை நடத்தியுள்ளார் பாமக ராமதாஸ். 'கூட்டணியை நானே முடிவு செய்வேன். 2026 வரை நான் தான் தலைவர். பலர் சமாதானத்திற்காக பஞ்சாயத்து செய்தார்கள் ஆனால் ஆட்டம் டிராவில் முடிந்துவிட்டது. எங்கள் வீட்டில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என தெரிவித்தேன் ஆனால் மீறி வந்தார் சௌமியா. கட்சிக்காக உழைக்கத் தெரியாதவர் அன்புமணி. என்னை குல சாமி என்றபடியே நெஞ்சில் குத்தி விட்டார். என்னை நடைப்பிணமாக்கிவிட்டு இன்று நடைபயணம் போகிறார்' என அடுக்கடுக்காத அட்டாக் செய்துள்ளார் ராமதாஸ். ஏன்? என்ன ஆனது?
இதற்கு அன்புமணி தரும் பதில் என்ன? 126 தொகுதிகளை தேர்வு செய்து நடைப்பயணத்தை தீவிரப்படுத்தி, தன் பக்கமே பலம் இருப்பதாக காட்ட நினைக்கிறார் அன்புமணி. இன்னொரு பக்கம் சௌமியா அன்புமணிக்காண தொகுதியாக, பாப்பிரெட்டிப்பட்டியை டிக்கடித்து, அங்கே கள வேலைகளையும் தொடங்கி விட்டனர் ஆனாலும் யார் கைக்கு பாமக செல்லும்? என்ற போர், இன்னும் உக்கிரமடைந்து உள்ளது.