அமித்ஷாவின் மதுரை விசிட், தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய புதிய அசைன்மென்ட் என முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவுடன் கூட்டணி சம்பந்தமாக புதிய ஹின்ட் கொடுத்துள்ளார் ராமதாஸ். நம்பிக்கையோடு உள்ளது பாஜக.
அதே நேரத்தில், பாஜக முன்னெடுக்கும் ஆன்மீக மாநாடு உள்ளிட்ட அடுத்தடுத்த அஜெண்டாக்களை, தொகுதி மறு வரையறை அஸ்திரம் மூலமாக பதிலடியாக ஏவுகிறார் மு.க ஸ்டாலின்.
இங்கே பாஜகவுக்கு துணையாக எடப்பாடி உள்ளார் என்றும் துணை கனைகளையும் வீசுகிறார். இதையொட்டி, அதிமுக தரப்பில் இருந்தும் பதிலடிகள் வருகின்றன. உதயநிதியை நோக்கி அரசியல் குண்டுகளை வீசுகின்றனர்.
இந்த நிலையில், எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் தவெக. முக்கியமாக 'அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக' என பல்வேறு கட்சிகளும் கூட்டணிக்காக காத்திருக்கின்றன 'ஆட்டம் நம் கையில் எனவே மாநாடு, சுற்றுப்பயணம், தொகுதி தேர்வு. இதில் தீவிரமாக பயணிப்போம்' என உற்சாகப்படுத்தியுள்ளார் விஜய்.