இரு நாட்கள் முன்பு ராமதாஸை சந்தித்தார் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன். பலரை கட்சியில் இணைத்து தம்மை பலமாக மாற்றி, அன்புமணியை ஓரங்கட்ட திட்டமிடலாம் என 'டெல்லி'-யும் எச்சரித்தது. அதன் பிற்பாடே பதறியடித்து தைலாபுரம் பறந்தார் அன்புமணி என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் மதுரையில் 'முருகன் மாநாடு' நடக்கவுள்ளது. இதை வைத்தும், ஒரு 5 முக்கியமான திட்டங்களும் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமாக முன்னெடுக்க உள்ளார் நயினார். இதன் முன்னோட்டமாகவும், அமித் ஷா-வின் 'மதுரை விசிட்' இருக்கும் என்கிறார்கள் கமலாலய சீனியர்கள்