நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமதாஸை சந்தித்து, சுமார் 45 நிமிடங்கள் உரையாடியுள்ளார் அன்புமணி. கட்சி, சொத்து விவகாரம் பேசப்பட்டது. 3 டிமாண்டுகளை ராமதாஸ் முன்வைத்தார் என்கிறார்கள்.
இன்னொருபக்கம் ஆடிட்டர் குருமூர்த்தி & சைதை துரைசாமி ஆகியோர், தைலாபுரத்தில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக , ராமதாஸிடம் உரையாடியுள்ளனர். அமித் ஷா மதுரைக்கு வரும்போது, பாமக கூட்டணி உறுதியாகிவிட வேண்டும் என்பதற்கான மீட்டிங் என்றும் தகவல். இதில், உள்ளே இருந்து ஆடிட்டர் யாருக்கோ போன் போட்டுக் கொடுக்க, அதற்குப்பின் ராமதாஸ் முகம் மலர்ச்சி என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.