கமலின் 'Thug Life' பிரச்சனை. இதில் ஸ்டாலின் ஏன் மௌனமாக இருக்கிறார்? என கேள்விகள்.
அதற்கு முக்கியமான காரணம் உள்ளது என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். இன்னொரு பக்கம், அமித் ஷா, எடப்பாடி, விஜய் என மூவர் தரும் நெருக்கடிகளை சமாளிக்க 'ஆபரேஷன் 3' என்கிற புது அசைன்மென்டை கையில் எடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். மண்டலங்களுக்கு ஒரு ரூட் பிளான். கோவையைப் பொறுத்தவரை ஆறு வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். முக்கியமாக 'செந்தில் பாலாஜி - எஸ்.பி வேலுமணி' எதிரெதிராக இருக்கும் இருவருமே,புது டீல் போட்டுள்ளனர் என்றும் ஒரு டிவிஸ்ட்.
சேலம் எடுத்துக் கொண்டால் ஆறு திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். குறிப்பாக பாமக மூலமாக எடப்பாடிக்கு செக். இப்படியாக மு.க ஸ்டாலினின் இந்த புது ஆபரேஷன் வொர்க்அவுட் ஆகுமா?