தமிழ்நாட்டில் அடுத்த ஓராண்டு திமுகவுக்கு டஃப் ஃபைட் கொடுக்க, பவன் கல்யாணை களம் இறக்கும் பாஜக. அமித்ஷா வகுத்து கொடுத்திருக்கிற வியூகங்கள். இதை முறியடிக்க எ.வ வேலுவுக்கு புது அசைன்மென்ட் கொடுத்திருக்கும் ஸ்டாலின்.
உதயநிதி மூலம் மேற்பார்வையும் நடக்கிறது. இன்னொரு பக்கம் அடுத்த தேர்தலில் சீனியர்கள் சிலருக்கு சீட் கட் என தகவல்கள் அதனால் தன்னுடைய தொகுதி பறிபோய்விடுமோ என்கிற பதற்றத்தில் பொன்முடி. அதே நேரத்தில், அவரின் திருக்கோவிலூர் தொகுதிக்கு இப்போதே ரேஸ் தொடங்கிவிட்டது. முன்னணியில் அவருடைய மகன் கவுதம் சிகாமணி உள்ளார். அதன் தொடர்ச்சியாக மண்டல பொறுப்பாளர்கள், ஒவ்வொரு மாவட்டமாக மீட்டிங் நடத்துகின்றனர். மதுரை மீட்டிங்கில் தங்கம் தென்னரசு-விடம் ஓப்பனாகவே, மா.செ-வை போட்டுக் கொடுத்த திமுக நிர்வாகிகள். புத்தம் புதுவார் வேகம் எடுக்கிறது.