'ராமதாஸ் - அன்புமணி' இடையிலான மோதலில், சமரச முயற்சியில் இறங்கி இருக்கும் ஜி கே மணி. இதில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனக்கே ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை காட்டி, அன்புமணியை ஓரம் கட்ட திட்டமிட்டு இருந்தார் ராமதாஸ். இதை புரிந்து கொண்டு, ராமதாஸை ஓரங்கட்ட, தனக்கே பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதை அன்புமணி உணர்த்தும் விதமாக ஆப்சன்ட் ஆகியுள்ளார். இரண்டு பேரும் விடாப்பிடியாக இருக்க, 'இரட்டை பாமக' உருவாகி விடுமோ என்கிற அச்சத்தில் இருக்கும் தொண்டர்கள். இன்னொரு பக்கம், விஜய்யுடன் கூட்டணி சேர, டீல் பேசும் ஓபிஎஸ் டீம். புது டிவிஸ்ட்.