'ஆபரேஷன் சிந்தூர்' ஏன் நடந்தது? அந்த பெயர் எப்படி வந்தது? இன்னொரு பக்கம், நான்காண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது திமுக. '2026'-ல் வெற்றி பெற, ஐந்தாம் ஆண்டில் சில வியூகங்களை வகுத்துள்ளன. அதை விரைவாக அடையவிடாமல் தடை போடும் வகையில் சில உட்கட்சி பிரச்சினைகள் உள்ளன. முக்கியமாக, ஒவ்வொரு மாவட்டங்களையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயம், திமுக தலைமைக்கு உள்ளது. அந்த வகையில் விடுபட்ட மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார் மு.க ஸ்டாலின். இதில்தான் சீனியர் அமைச்சர்களான கே.என் நேரு, எ.வ வேலு என போட்டா போட்டி நிலவுகிறது. அதே நேரத்தில் மாநில அளவில் மிக மிக முக்கிய பதவியை குறி வைக்கும் உதயநிதி ஆனால் அதை ரிஜெக்ட் செய்துள்ளார் மு.க ஸ்டாலின். இதனால் உதயநிதி அப்செட் என்கிறார்கள். இருந்தும் அவரை சமாளிக்க, சமாதானப்படுத்த நாற்பது தொகுதிகள் அவருக்கு மொத்தமாக கொடுக்கவும் அறிவாலயம் திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். திமுகவு-க்குள் தேர்தல் அனல் கொதி நிலையை அடையத் தொடங்கியுள்ளது.