'முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வகித்துவரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை டாக்டர் சரவணன் குறிவைக்கிறார்' என்றும், 'இல்லையில்லை, மதுரை மாவட்டத்தில் மூன்று மாவட்டச் செயலாளர்கள் இருந்துவரும் நிலையில், அதை மாற்றி இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கில் சரவணனையும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்போகிறார்கள்' என்றும் அ.தி.மு.க-வினர் மாறி மாறிப் பேசிவருவதால் பரபரத்துக் கிடக்கிறது மதுரை மாநகர அ.தி.மு.க!