இந்திய குடிமக்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் குடியுரிமையைத் துறந்துவிட்டு வெளிநாட்டு குடியரிமையைப் பெற்றுவருகிறார்கள். இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் வியப்பை அளிக்கிறது.இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையைக் கைவிட்டு சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகமாகக் குடியேறுகிறார்கள்.